இது உபநிடத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள்
இந்த ரகசியம் ஏழ்கடல்களை மட்டுமல்ல ஏழு உலகங்களைப் பற்றியும் சொல்கிறது. அவை என்னவென்று நாமும் தெரிந்து கொள்வேமே!
முதல் உலகம்:
ஜம்பூத்வீபம் - இதுதான் நாம் வாழும் பூமி
2.பிலட்சத்தீவு
3.சால்மலித்தீவு
4.குசத்தீவு
5.கிரௌஞ்சத்தீவு
6.சாகத்தீவு
7.புஷ்கரத்தீவு
.
இதுதான் ஏழு உலகங்கள். இதுபோக கடவுளுக்கென்று ஒரு உலகமும் இருக்கிறது. அதுதான் வைகுண்டம் - கடவுள் உலகம்-இங்குதான் இறைவன் இருக்கிறான் என்று சொல்லப்படுகிறது
ஏழு கடல்கள்
1. உப்புக்கடல்
2.இக்ஷ சமுத்திரம் (கரும்புச் சுவையுடயது)
3.மது சமுத்திரம் (தேன் சுவையுடையது) இதற்கு சுராசமுத்திரம் என்ற பெயரும் உண்டு
4.நெய் கடல்
5.பாற் கடல்
6.தயிர் கடல்
7.இளநீர் கடல்
ஜம்பூத்வபம் பற்றி நமக்குத் தெரியும். அதுதான் நமது பூமி.
மற்ற ஆறு உலகங்களைப் பார்ப்போமே!
இவையெல்லாம் பூமியிலிருந்து எத்தனை மைல்தூரத்தில் இருக்கிறது என்று கேட்டுவிடாதீர்கள். இவை பல லட்சம் அல்ல பல போடி மைல்கள் தூரத்தில் இருக்கலாம். ஆனால் பூமியின் தென்துருவத்தில் இருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்தால் இந்த உலகங்களைக் காணமுடியுமாம். (கனவிலும் கற்பனையிலும் சென்று வரலாமே)
ஒவ்வொரு உலகத்திலும் ஏழு கண்டங்கள் ஏழு மலைகள் ஏழு நதிகள் இருக்கின்றன. அது மட்டுமல்ல அங்கே ஆட்சிபுரிந்தவர்களும் ஆட்சிபுரிபவர்களும் கடவுளின் பேரன்கள் என்றும் சொல்லப்படுகிறது.
பிலட்சத்தீவு - (பிலட்சம் - மரங்கள்)
கண்டங்கள் -------- மலைகள் ------- நதிகள்
வயசம் -------- மணிகூடம் ------- அருணா
சீலம் -------- வச்சிரகூடம் ------- ரமணா
சுபத்திரம் -------- இந்திரசேனம் ------- ஆங்கிரசு
சாந்தம் -------- சோதிடமா ------- சாவித்திரி
ஷேமம் -------- தூம்ப்ரவர்ணம் ------- சுப்ரபாதா
அபயம் -------- இரணியகிரிவம் ------- ருதம்பரா
ரிதம் -------- மேகமாலம் ------- சத்தியம்பரா
இந்த உலகத்தில் இந்து மசிக்குவன் தனது மனைவியுடன் முதன்முதலில் குடியேறி அரசாட்சி செய்தான். இவனது பரம்பரை அம்ஸர், பதங்கர், ஊர்த்துவாயனர், சத்தியாகர் என்று நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கின்றனர். இந்த உலகுக்கு அடுத்து இருப்பது இக்ஷசமுத்திரம்.
அடுத்தது சால்மலித்தீவு - இங்கு சால்மலி என்னும் மரங்கள் இருக்கின்றன.
கண்டங்கள் ------ மலைகள் ------ நதிகள்
சரோசனம் ------ சுவற்சம் ------ அனுமதி
சௌமனசியம் ------ சதசிருங்கம் ------ சினிவாலி
ரகணகம் ------ வாமதேவம் ------ சரசுவதி
தேவபெருகம் ------ குந்தம் ------ குரு
பாரிபத்ரம் ------ குமுதம் ------ அக்கினி
ஆப்பியாயனம் ------ புஷ்பவருஷம் ------ நந்தா
அபிக்கியாயனம் ------ சகசுருதி ------ முகுந்தா
இங்கு எக்கியாபாகு என்ற அரசன் முதன்முதலில் ஆட்சி செய்தான். அவனது பரம்பரையினர் சுருத்திரர், விசுந்தராயர், இஷ்டாந்தரர்.
இந்த உலகை அடுத்து இருப்பது சுராசமுத்திரம். இதன் சுவை தேன்போலவும் திராட்சை ரசம் போலவும் இருக்குமாம்.
குசத்தீவு
இங்கே குசஸ்தம்பங்கள் என்னும் மலைக்குன்றுகள் இருக்கின்றன. குன்றின் உச்சியில் ஒளி உண்டு. அந்த ஒளி சந்திரனைப்போல் குளிர்ச்சியாகவும் மின்மினிப் பூச்சிகளைப்போல் பளிச்சிடவும் செய்யும். இந்த ஒளியை அங்குள்ள மக்கள் வணங்குகிறார்கள்.
கண்டங்கள் ------ மலைகள் ------ நதிகள்
வசு ------ பெப்புரு ------ ரசகுல்லியை
வசுதனம் ------ சதசிங்கம் ------ மதுகுல்லியை
திரடருசி ------ பிப்பலம் ------ சுருதுவிந்தை
நாபிகுமுதம் ------ சித்திரக்கூடம் ------ மித்துருவிந்தை
சத்தியவிரதம் ------ தேவாகம் ------ வேதகற்பை
விப்பிரம் ------ ஊர்த்தரோமா ------ கிருதச்சுதா
வாமதேவர் ------ திரவிணம் ------ மந்திரமாலை
இங்கே இரணியரோமன் என்பவன் முதன் முதலில் ஆட்சி செய்தான். இவனது பரம்பரையினர் குலசர், கோவிதர், அபியுக்தர், குலகர்.
இதற்கு அடுத்து இருப்பது நெய்கடல்.
கிரொஞ்சத்தீவு
இங்கே கிரொஞ்சம் என்னும் பெரிய மலை இருக்கிறது. அதுபோக ஏழு மலைகள் உண்டு
கண்டங்கள் ------ மலைகள் ------ நதிகள்
நுமோதனம் ------ சுக்கிலம் ------ அபையா
துவகனம் ------ மர்த்தமானம் ------ அமிர்தவுகா
மேகபிஷ்டம் ------ போஜனம் ------ ஆரியகா
சுதானம் ------ உபபெருகணம் ------ தீர்த்தவதி
ரெஞ்சிஷ்டம் ------ ஆனந்தம் ------ பாத்திராவதி
லோகிதாரணம் ------ நந்தம் ------ பவித்தீர்வம்
வனஸ்பதி ------ சர்வதோபத்திரம் ------ சுக்கிலை
இங்கு ஆட்சி செய்தது கிருதபிரஷ்டன். இவனது பரம்பரையினர் குருவர் ரிஷபா, திரவினர், தேவா.
இதற்கடுத்து இருப்பது பாற்கடல். பிரளய காலத்தில் ஸ்ரீமன் நாராயணன் இங்குதான் தங்கியிருப்பாராம்.
சாகத்தீவு – சாகம் என்னும் மரங்கள் நிறைந்து காணப்படும் உலகம்
கண்டங்கள் ------ மலைகள் ------ நதிகள்
புரோசகம் ------ ஈசானம் ------ அநாகா
மனோசவம் ------ உருசிங்கம் ------ ஆயுர்த்தா
வெபானனி ------ பவபத்திரம் ------ உபயசிருஷ்டி
தூம்பராணிகம் ------ சதகோரம் ------ அமராசிதா
சித்திராகம் ------ சகஸ்திர சுரோதசு ------ பஞ்சதி
வெகுரூபம் ------ தேவபாலம் ------ சகஸ்திரசுதி
விசுவாசம் ------ மகாநசம் ------ நிசதுருதி
இங்கே ஆட்சி செய்தது மேதாதி. இவனது பரம்பரையினர் நிசவிருதர், சத்தியவிருதர், கானவிருதர், அனுவிருதர். இந்த உலகத்தை அடுத்து இருப்பது தயிர் கடல்.
புஷ்கரத்தீவு
புஷ்கரம் என்கிற தாமரை மலர் போன்ற ஒரு லட்சம் மலைக்குன்றுகள் இருப்பதால் இந்த உலகிற்கு இந்தப் பெயர் வந்தது. இந்த மலைக்குன்றுகளுக்கு நடுவே இமயமலை போன்ற மானசோத்தரகிரி என்ற பெரிய மலையும் இருக்கிறது.
இங்கே இரண்டு கண்டங்கள் உள்ளன. அவை ரமணகம் , யாதனம். இங்கு விதி கோத்திரன் ஆட்சிபுரிந்தான். இவனது பரம்பரையினர் ரமணகர், யாதனர். இவர்களை தேவர்கள் என்றும் இங்த உலகை தேவலோகம் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.
கடவுள் உலகம் - வைகுண்டம்
இந்த உலகின் சுற்றளவு 500 கோடி கிலேமீட்டர். நான்கு பக்கமும் புஷ்கரசூடம், வாமணம், அபராஜிதம் ,ரிஷபம் என்ற நான்கு மலைகள் இருக்கின்றன. இங்கே கற்பகவ விருட்சமாக பாரிஜாதமலர் உள்ளது. காமதேனு, ஐந்துதலைநாகம், பத்துதலை நாகம் எல்லாம் இங்கு உண்டு. இந்த உலகத்தில்தான் கடவுள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.
நமது பிறவி பூமியில் மட்டும்தானா?யார் கண்டது நமது அடுத்த பிறவி கிரொஞ்சத் தீவில்கூட இருக்கலாம்.கடவுள் உலகத்திற்குச் சென்றுதான் கேட்டு வரவேண்டும்.
ஆனால் அதற்கு முன்பு மனிதனுக்கு அடுத்த பிறவி என்பது உண்டா என்பதைதெரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் யுகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.
யுகங்கள் பற்றிய செய்தி அடுத்த வலைப்பூவில் மலரும்.
kanishka